ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் மாபெரும் ’ராக்கெட் எல்விஎம்3-எம்2’ இன்று (ஆக்.23) வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. 36 செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ’சந்திரயான் - 3’ விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆக.23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“சந்திரயான் 3 கிட்டவிட்ட தயார் நிலையிலுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் எல்லாம் முடிந்துள்ளது. இருப்பினும் இன்னும்சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. அதனால் அதைச் சற்று தாமதித்தே ஏவவுள்ளோம். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஜூன் மாதத்தில் சந்திரயான் 3-ஐ ஏவவுள்ளோம்” எனத் தெரிவித்தார் .
மேலும், ’எல்விஎம் - 3’ வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்துப் பேசிய அவர்,“இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணி. பிரதமர் மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது. எல்விஎம்- 3 வணிக சந்தைக்கு வர வேண்டும் என்று அவர் விரும்பினார்.
நமது ராக்கெட்களை பயன்படுத்தி வணிகக் களத்தை ஆராய்வதற்கு அவர் அளித்த ஆதரவு முக்கியமானது. நாங்கள் ஏற்கனவே தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டோம். 36 செயற்கைக்கோள்களில் 16 கோள்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் பிரிக்கப்படும். அதுகுறித்த தகவல்கள் சிறிது நேரத்தில் வரும்” என்றார்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளாக உள்ள பிரச்சனை 100 நாளில் தீர்க்க இயலாது - பிரதமர்