ETV Bharat / bharat

காங்கிரஸை காப்பாற்றினால் நாட்டை காப்பாற்ற முடியும் - கனையா குமார் - கனையா குமார்

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தினால் மட்டுமே மக்கள் விரோத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என கனையா குமார் தெரிவித்துள்ளார்.

Kanhaiya Kumar joins Congress
Kanhaiya Kumar joins Congress
author img

By

Published : Sep 28, 2021, 10:41 PM IST

டெல்லி: பாஜக அரசுக்கு எதிராக பலமான அணியை உருவாக்கும் நோக்கில் கனையா குமார் இன்று (செப். 28) காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், குஜராத் வட்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிகழ்விற்கு பிறகு கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சிந்தாந்த ரீதியில் இணைந்துள்ளேன்

இதையடுத்து, ஜிக்னேஷ் மேவானி பேசுகையில், "நான் சுயேச்சை எம்.எல்.ஏவாக இருக்கிறேன். தற்போது காங்கிரஸில் இணைந்தால் என்னால் எம்.எல்.ஏவாக தொடர முடியாது. அதனால், சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் கட்சியில் ஒரு அங்கமாக இணைந்துள்ளேன். வரும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  • I could not join the Congress formally due to technical reasons. I am an independent MLA, if I join a party, I may not continue as an MLA... I am part of the Congress ideologically, will fight the upcoming Gujarat polls from Congress symbol: Gujarat MLA Jignesh Mewani pic.twitter.com/EcsNndL0m2

    — ANI (@ANI) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது பேசிய கனையா குமார்,"காங்கிரஸ் ஒரு பெரிய கப்பல் போன்றது. அதை காப்பாற்றினால் பலரின் லட்சியங்கள், அண்ணல் காந்தி வலியுறுத்தும் ஒற்றுமைத்துவம், பகத் சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவம், இவையனைத்தும் பாதுகாக்கப்படும்.

பல லட்ச இளைஞர்களுக்காக...

மேலும், காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றாமல் இந்தியாவை காப்பாற்ற முடியாது என நாட்டின் பல லட்ச இளைஞர்கள் நினைக்கின்றனர். அதனால்தான், நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளேன் " எனக் கூறியுள்ளார்.

  • Congress party is like a big ship, if it's saved, I believe many people's aspirations, Mahatma Gandhi's oneness, Bhagat Singh's courage & BR Ambedkar's idea of equality will be protected too. This is why I have joined it...: Former CPI leader Kanhaiya Kumar after joining Congress pic.twitter.com/B4vwknab1Z

கனையா குமார், ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவ சங்கத்தலைவராக இருந்தார். டெல்லி நாடாளுமன்ற தாக்குதலை நடத்திய அஃப்சல் குருவின் நினைவு நாளன்று தேசத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு சிறை சென்றவர்.

மேலும், 2019ஆம் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக சிபிஐ கட்சியில் இணைந்த கனையா, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 16 ஆண்டுகளுக்கு பிறகு எரியூட்டப்பட்ட ராணுவ வீரர் உடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.