பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, பெருங்கடல் சேவைகள், மாதிரியாக்கம், பயன்பாடு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் (O-SMART) எனப்படும் மூலத் திட்டத்தை, 2021-26 ஆம் ஆண்டு வரை ரூ.2,177 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெருங்கடல் தொழில்நுட்பம், பெருங்கடல் மாதிரியாக்கம் மற்றும் ஆலோசனை சேவைகள் (OMAS), பெருங்கடல் கூர்நோக்கு கட்டமைப்பு (OON), பெருங்கடல் உயிர்வாழா வளங்கள், ஆழ்கடல் உயிர்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல், கடலோர ஆராய்ச்சி மற்றும் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சிக் கலன்கள் பராமரிப்பு போன்ற ஏழு துணைத் திட்டங்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் (2021-26) இந்த திட்டம் ஆழ்கடல் பகுதியில் பயன்படுத்தக்கூடிய துல்லியமான தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் நடவடிக்கைகளை வலுப்படுத்தி விரிவாக செயல்படுத்த வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய தொழில் பயிற்சி திட்டம் ஐந்தாண்டு நீட்டிப்பு - ரூ.3,054 கோடி ஒதுக்கீடு