மும்பை: மும்பையில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் பேருந்துகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் ஓடத் தொடங்கின. இது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பிரிகான்மும்பை மின்சாரம் மற்றும் பேருந்துகள் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், “முதலமைச்சர் உத்தரவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டார். அதன்படி, மாலை 4 மணி வரை உணவகங்கள் 50 சதவீத இடத்தில் செயல்படலாம். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் கூட அனுமதியில்லை.
பேருந்துகளில் இருக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றக் கூடாது. உணவகங்கள், கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் திறக்கப்படும். எனினும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மல்டி பிளக்ஸ் திறக்க அனுமதியில்லை. மும்பையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கோவிட் பாதிப்புகள் கணிசமாக குறைந்துவருகின்றன. அந்த வகையில், புதிய பாதிப்புகள் 12 ஆயிரத்து 557 ஆக பதிவாகியுள்ளன. 14 ஆயிரத்து 433 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடுதிரும்பியுள்ளனர். உயிரிழப்பு 233 ஆக உள்ளது.
மாநில அளவில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 527 கோவிட் பாதிப்பாளர்கள் உள்ளனர். இதுவரை 55 லட்சத்து 43 ஆயிரத்து 267 பேர் முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். உயிரிழப்பு 1.72 விழுக்காடு ஆக உள்ளது. 95.05 விழுக்காட்டினர் குணமடைந்துவருகின்றனர்.
இதையும் படிங்க : +2 மாணவர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த ரங்கசாமி