புதுச்சேரி : சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து என். ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் புதுச்சேரி பொதுச்செயலார் ஆர். செல்வம் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமியிடம், பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் எம்.எல்.ஏ., செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.