ETV Bharat / bharat

திருவிழாவில் நடனமாடி மக்களை கவரும் டீ விற்பனையாளர்

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ராஜிகிர் மஹோத்சவ திருவிழாவில் டீ விற்பனையாளர் ஒருவர் பக்லா பாபா நடனமாடி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.

author img

By

Published : Dec 5, 2022, 9:37 AM IST

பிகார் ராஜ்கிர் மஹோத்சவ திருவிழாவில் நடனமாடி மக்களை கவரும் டீ விற்பனையாளர்

நாளந்தா: பீகார் நவாடா மாவட்டத்தில் சமீபத்தில் ராஜ்கிர் மஹோத்சவ நடன விழா நடைபெற்றது. ஆண்டுக்கொரு முறை மூன்று நாட்கள் நடக்கும் இசை விழாவில் பக்லா பாலா என்ற டீ விற்பனையாளர் வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். பாபா சுவையான 31 வகையான தேநீர் தயாரித்து அசத்தி வருகிறார்.

இது குறித்து பக்லா பாபா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் டீ தயாரிக்கும் போது அனைத்து இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதாக தெரிவித்தார். மேலும் தேநீர் மூலம் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

பக்லா பாபா என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் மிதிலேஷ் குமார் சந்தோஷி என்ற பிந்து குப்தா. மேலும் டீ தயாரிக்கும் போது தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடி கொண்டே டீ கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் டீ குடித்து செல்கின்றனர்.

பக்லா பாபுவின் கடையில் 31 வகையான தேநீர் வகைகள் உள்ளன.ஷிலாஜித், குங்குமப்பூ, கிராம்பு போன்ற இயற்கை டீ வகைகளும் கிடைக்கின்றன. மேலும் தேநீரின் சுவையை அதிகரிக்க தனித்துவமான மூலிகை தண்ணீரால் தேநீர் தயாரிக்கிறார். இங்கு ரூ.20 முதல் ரூ.30 வரை தேநீர் விற்பனைக்கு உள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் ஜி20 ஷெர்பா கூட்டம் தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.