பீகார்: பான்கா மாவட்டத்தில் உள்ள பாப்ஹன்ங்கமா கிராமத்தைச் சேர்ந்த, ரூபெஷ் மண்டல் என்பவரின் மகன் பாசுகி குமார் (8). விஷ்வம்பர்சக் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரின் மகன் நிதீஷ் குமார் (14), இருவரும் பாப்ஹன்ங்கமா பகுதியில் உள்ள மாம்பழ தொட்டத்தில் மாம்பழங்களைப் பறிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
பாசுகி குமார் மரத்தின் மீது ஏரி மாம்பழங்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போது, பறித்த மாம்பழங்கள் தவறி கீழே விழுந்துள்ளது. அப்போது அவற்றை நிதீஷ் குமார் எடுக்க முயன்றுள்ளார். அதில் இருவருக்கும் தள்ளு முல்லு ஏற்பட்டுள்ளது. இதில் நிதீஷ் குமார், பாசுகி குமாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: பழங்குடி சிறுவனை காதலித்த சிறுமி ஆணவக்கொலை.. கர்நாடகாவில் நடந்தது என்ன?
படுகாயமடைந்த பாசுகி குமாரை, உறவினர்கள் அமர்புரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி மட்டும் அளித்த மருத்துவர்கள் சிறுவனை மாயாகஞ்ச் பகல்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பரிந்துரை செய்துள்ளனர். இதனிடையே மாயாகஞ்ச் பாகல்பூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பாசுகி குமார் கடந்த வியாழன் அன்று உயிரிழந்து விட்டார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் இளம் பெண் போட்டோவை மார்பிங் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் ஜாமீன்!
மிகுந்த சோகத்திற்கு மத்தியில் சிறுவனின் உடலை தன் சொந்த ஊரான பாப்ஹன்ங்கமாவிற்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் சிறுவனுக்கு நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களைப் பதட்டத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், பாசுகி குமாரைக் கொலை செய்த நிதீஷ் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, அமர்பூர் - பான்கா பிரதான சாலையில் சிறுவனின் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த அமர்பூர் காவல் நிலைய ஆய்வாளர் குர்ஷித் ஆலம் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்பு கொலையாளியை விரைவாகக் கைது செய்யப்படும் என்று அதிகாரிகள் ஊர்மக்கள் மற்றும் பாசுகி குமாரின் உறவினர்களிடம் உறுதி அளித்த பின், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும் போலீசார் நிதீஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாவர்க்கர் அவுட்; 'இனி சாவித்ரி பூலே, அம்பேத்கர் கவிதைகளே இடம்பெறும்' - கர்நாடகா அரசு அதிரடி