பாட்னா (பிகார்): பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கும் விழாவில் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்ள மாட்டார் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “மாநில அரசுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாற்றம் தேவை. மாநிலத்தில் வேலையில்லை, விவசாயிகள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். நாங்கள் மக்களின் பிரதிநிகள். அவர்களுடன் நிற்போம். நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
राजद शपथ ग्रहण का बायकॉट करती है। बदलाव का जनादेश NDA के विरुद्ध है। जनादेश को 'शासनादेश' से बदल दिया गया। बिहार के बेरोजगारों,किसानो,संविदाकर्मियों, नियोजित शिक्षकों से पूछे कि उनपर क्या गुजर रही है।NDA के फर्ज़ीवाड़े से जनता आक्रोशित है। हम जनप्रतिनिधि है और जनता के साथ खड़े है
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">राजद शपथ ग्रहण का बायकॉट करती है। बदलाव का जनादेश NDA के विरुद्ध है। जनादेश को 'शासनादेश' से बदल दिया गया। बिहार के बेरोजगारों,किसानो,संविदाकर्मियों, नियोजित शिक्षकों से पूछे कि उनपर क्या गुजर रही है।NDA के फर्ज़ीवाड़े से जनता आक्रोशित है। हम जनप्रतिनिधि है और जनता के साथ खड़े है
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 16, 2020राजद शपथ ग्रहण का बायकॉट करती है। बदलाव का जनादेश NDA के विरुद्ध है। जनादेश को 'शासनादेश' से बदल दिया गया। बिहार के बेरोजगारों,किसानो,संविदाकर्मियों, नियोजित शिक्षकों से पूछे कि उनपर क्या गुजर रही है।NDA के फर्ज़ीवाड़े से जनता आक्रोशित है। हम जनप्रतिनिधि है और जनता के साथ खड़े है
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 16, 2020
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்.
இருப்பினும் அவரின் கட்சியே 75 தொகுதிகளில் வெற்றிப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. அவரின் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரசுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 125 இடங்களில் வெற்றி பெற்றது.
அக்கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு 43 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அவர் பாஜகவை விட 31 தொகுதிகள் பின்தங்கியுள்ளார். இந்நிலையில், நிதிஷ் குமார் இன்று மாலை 4.30 மணிக்கு பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்கிறார். அப்போது, துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்தும் பதவியேற்கிறார்.
நீண்ட நாள்களாக துணை முதலமைச்சராக பதவி வகித்தும்வரும் சுஷில் குமார் மோடி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 'நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிப்போம்' என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் அமித் ஷா, நட்டா பங்கேற்பு!