போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் அசோகா கார்டன் பகுதியில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள் சக மாணவி உடை மாற்றும் போது வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் அலோக் ஸ்ரீவட்சவா கூறுகையில், “இந்த கல்லூரியில் செப்.17 விஷ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சி விழா மாணவி ஒருவர் பங்கேற்றார். அதன்பின் கல்லூரி கழிவறையில் தனது உடையை மாற்றியுள்ளார். அப்போது அவருக்குத் தெரியாமல் அவருடன் பயிலும் சக மாணவர்கள் மூன்று பேர் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவை அம்மாணவியிடம் காண்பித்து, ரூ.7,000 பெற்று தரவில்லையென்றால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி கல்லூரிக்கு வருவதை நிறுத்தியுள்ளார்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீடியோ விவகாரம் தெரியவந்தது. அதனடிப்படையில் ஒரு மாணவனை போலீசார் கைது செய்தனர். இதனிடையை தலைமறைவான 2 மாணவர்கள் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: சட்டப் பேரவையில் குட்கா போடும் எம்எல்ஏ