பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா மீது வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (ஜனவரி 4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாகிஸ்தான், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவ் பிறந்த இடத்தில் குருத்வாரா நங்கனா சாஹிப் கட்டப்பட்டுள்ளது.
குருத்வாராவின் நிர்வாகியின் மகள் ஜிக்ஜித் கவுரை கடத்திய ஒரு சிறுவனின் குடும்பத்தினரால் இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் சீக்கிய புனிதத் தலத்தின் மீது தாக்குதல்!