ETV Bharat / bharat

ஊரடங்கு: 300 பேரின் கண்டெய்னர் பயணமும்... அதிர்ச்சியடைந்த காவலர்களும்...!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், உள்நாட்டிலேயே தாயகம் (மாநிலம் விட்டு மாநிலம்) திரும்ப நினைத்த தொழிலாளர்களில் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. சட்டம் தனது கடமையை ஆற்றியது.

Maharashtra
Maharashtra
author img

By

Published : Mar 27, 2020, 12:34 PM IST

Updated : Mar 27, 2020, 2:36 PM IST

மும்பை: தெலங்கானாவிலிருந்து ராஜஸ்தானுக்கு இரண்டு கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மற்ற மாநிலங்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் சிக்கியுள்ளனர். பிற மாநிலங்களில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை நினைத்து, அங்கு எப்படி இருக்குமோ? என்ற அச்ச உணர்விலேயே இருந்துவருகின்றனர்.

பலர் எந்த வழியிலாவது தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அவ்வளவு சாத்தியமன்று.

சிலர் கற்பனையில்கூட இங்கிருந்து இப்படித் தப்பிச் செல்லலாம், அப்படித் தப்பிச் செல்லலாம் என்றும், தங்களது குடும்பத்தினரைப் பார்த்து மகிழும் தருணங்களையும் எண்ணி தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளுகின்றனர்.

பிடிபட்ட கண்டெய்னர் லாரி

அத்திபூத்தாற்போல் அதிலும் சிலர் அதனைச் செயல்படுத்த எத்தனிப்பார்கள். இதனைச் சில திரைப்படங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். இது 'முதல் ரகம்'.

சிலர் மற்றவர்களை எதன் மூலமாகவோ அவர்களின் விருப்பத்தின் பெயரிலோ, வலுக்கட்டாயமாகவோ, நிபந்தனைகளின் அடிப்படையிலோ அனுப்பிவைப்பர். இது 'இரண்டாம் ரகம்'.

பக்கிரி படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பெட்டியில் வேறொரு நாட்டுக்குச் செல்லுவது, நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது மனைவி, மகன், மச்சான், மாமனார் உள்ளிட்டோரை பார்சல்செய்து அனுப்ப முயலுவது இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தது.

இந்நிலையில், 'முதல் ரகம்' நிகழ்வொன்று நடந்தேறியுள்ளது. நாடே ஊரடங்கில் அடங்கிப்போயுள்ள இந்தச் சூழலில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தெலங்கானாவிலிருந்து ராஜஸ்தானிலுள்ள தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர்.

இவர்கள் இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் தெலங்கானாவிலிருந்து புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கண்டெய்னர் லாரிகள் மகாராஷ்டிரா-தெலங்கானா மாநில எல்லையில் யவத்மால் பகுதியில் வந்துகொண்டிருந்தன.

அப்போது, கரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட ஊரடங்குச் சேவையில் காவல் துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கண்டெய்னர்களைக் கண்ட காவல் துறையினர் அதனை மடக்கி சோதனையிட்டபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இருக்கத்தானே செய்யும்... நாடே கரோனா பெருந்தொற்றுக்கு (இதன் தன்மை அப்படி - கண்ணுக்குத் தெரியாத எதிரி) அஞ்சி வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழலில் 300 தொழிலாளர்களின் கண்டெய்னர் பயணம் தேவையா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர்களின் உணர்வு இசைவு தெரிவிக்கவில்லை. தங்கள் தரப்பு விருப்பம்/நியாயம் நிறைவேறிட வேண்டும் என்பதே அவர்களின் அவா!

ஆனால், அவர்களின் அவாவுக்குச் சட்டம் வளைந்துகொடுக்குமா? அது அதன் கடமையைத்தானே செய்யும்.

இது குறித்து அதில் பயணித்தவர்கள், "பேருந்து, ரயில் போக்குவரத்து ஏதும் இல்லாததால் கண்டெய்னர் லாரியில் ஒளிந்துகொண்டு எங்களின் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் செல்ல நினைத்தோம்" என்று வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: 'காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’

Last Updated : Mar 27, 2020, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.