டெல்லி: பிரதான் மந்திரி (பிஎம்) கிஷான் (விவசாயிகள்) திட்டத்தின் பலனை மேற்கு வங்க விவசாயிகள் பெற முட்டுக்கட்டை போடுவது ஏன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விவசாய திட்டங்களை மம்தா பானர்ஜி தடுக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்த 24 மணி நேரத்தில் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “எதிர்க்கட்சிகள் தங்களின் சித்தாந்தம் மூலம் விவசாயிகளை சுட்டு தள்ளுகின்றன” என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய நரேந்திர சிங் தோமர், “விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
மேற்கு வங்கத்தில் பிஎம் கிஷான் சம்மன் நிதி திட்டத்தால் 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர்கள் பயன்பெற முடியாத வகையில் மம்தா பானர்ஜி தடுக்கிறார்.
மேற்கு வங்க விவசாயிகள் பிஎம் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் இணைந்தால் மாநிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.4,200 கிடைக்கும். ஆகவே மாநில அரசு இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும்.
எதிர்க்கட்சிகள் மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டன. ஆதலால் நேரத்திற்கு தகுந்தால் போல் மாற்றி மாற்றி பேசுகின்றனர். தங்களது சித்தாந்தம் என்னும் துப்பாக்கி கொண்டு விவசாயிகளின் தோளில் சுடுகின்றனர். தங்களை விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு, விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இவர்கள் இந்திய மக்களால் வெகுவிரைவில் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
விவசாய சட்டங்கள் குறித்து கூறுகையில், “இந்தச் சட்டங்கள் செழிப்பான விவசாயத்துக்கு வழி செய்கின்றன. விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். மேலும், தனியார் முதலீட்டை உறுதி செய்கின்றன. ஆகவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.
மேலும், “விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் அரசு தயாராக உள்ளது” எனவும் கூறினார். அண்மையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் 30ஆவது நாளை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ராகுல் பேரணி