இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று ஆற்றிய உரையோடு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை பற்றி கூறுகையில், உலகின் பல்வேறு தலைவர்களைச் சந்திப்பதற்கு பெரும் வாய்ப்பாக இருந்தது. நாம் வாழும் இந்த உலகத்தை அமைதியாக மாற்றுவதற்கு இந்தியா தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும். சுகாதாரத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி, பருவநிலை மாற்றமடையாமல் பாதுகாத்தல், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் அனைவரையும் ஒன்றிணைப்பது அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
-
This USA visit was an extremely productive one. Over the last few days, I have been able to take part in a diverse range of programmes, the outcomes of which will greatly benefit India and our development trajectory.
— Narendra Modi (@narendramodi) September 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This USA visit was an extremely productive one. Over the last few days, I have been able to take part in a diverse range of programmes, the outcomes of which will greatly benefit India and our development trajectory.
— Narendra Modi (@narendramodi) September 27, 2019This USA visit was an extremely productive one. Over the last few days, I have been able to take part in a diverse range of programmes, the outcomes of which will greatly benefit India and our development trajectory.
— Narendra Modi (@narendramodi) September 27, 2019
மேலும், ஹூஸ்டன் நகரில் பல உலகளாவிய நிறுவனங்களின் தலைமை அலுவலர்களை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த ஒருவார காலம் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: ஐநா அமைப்பின் பொதுச்சபைக் கூட்டத்தில் மோடி இன்று உரை!