ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா உறுதி! - இந்தியாவில் கரோனாவின் தாக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 502 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jun 15, 2020, 5:42 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி 325 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 797 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 547 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கின்போது அதிகரித்துள்ள சட்டவிரோத சிகரெட் கடத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.