நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது.
இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் பல மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, முதல்முறையாக நடைபெற்ற கோடைகால கூட்டத் தொடரில்,
- மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா
- முத்தலாக் சட்டத் திருத்த மசோதா
- தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 38 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க..இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - களநிலவரங்கள் உடனுக்குடன்!