ETV Bharat / bharat

வளர்ச்சி குறித்த விவரங்களை அரசு பூட்டி வைத்து கொள்ளுமா? - ப.சிதம்பரம் கேள்வி - சிதம்பரம் கேள்வி

டெல்லி: பொருளாதார வளர்ச்சி விவரங்களை வெளியிடாத அரசு, அதனை பூட்டி வைத்துக் கொள்ளுமா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம்
சிதம்பரம்
author img

By

Published : Jun 13, 2020, 10:10 PM IST

Updated : Jun 14, 2020, 10:58 AM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு துறைகள் தேக்கம் அடைந்து பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மின்சாரம், சுரங்கம், உற்பத்தி துறையின் வளர்ச்சி வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது.

இத்துறைகளின் வளர்ச்சியை குறிப்பிடுவதே தொழில்துறை உற்பத்தி குறியீடாகும் (ஐஐபி). இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான ஐஐபி எண்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், வளர்ச்சி குறித்த விவரங்களை அரசு பூட்டி வைத்துக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதாரம் பாதுகாப்பான கைகளில் உள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான ஐஐபி எண்களை வெளியிடாத அரசின் பாதுகாப்பான கைகளில் பொருளாதாரம் உள்ளது.

  • Economy is in safe hands, says the FM. It is in such ‘safe’ hands that the government will not release the IIP numbers for April 2020!

    Will the government lock up the IIP numbers in a safe vault to be opened only after 20 years?

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஐஐபி எண்கள் குறித்த விவரங்களை அரசு பூட்டி வைத்து விட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடுமா?" என பதிவிட்டுள்ளார். கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொழில்சாலைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராஜஸ்தானை குறிவைக்கும் பாஜக: பரபரப்பாகும் அரசியல் களம்

Last Updated : Jun 14, 2020, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.