மேற்கு வங்க பள்ளிகளில் பணிபுரிந்துவரும் உதவி ஆசிரியர்கள் பல நாட்களாகவே ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கேட்டுவந்துள்ளனர். ஆனால், மாநில அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் உதவி ஆசிரியர்கள் நதியா மாவட்டத்தில் குவிந்து கல்யாணி ரயில்வே நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உதவி ஆசிரியர்களை போராட்டத்தை கைவிடும்படி காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
![ஆசிரியர்களுக்கு எதிராக போலிஸ் தடியடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4165928_police.jpg)
ஆனால், தங்கள் முடிவில் உறுதியாக இருந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்நிலையில், அவர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கி தடியடி நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.