ETV Bharat / bharat

ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வருகை தந்த அமெரிக்க துணைத் தூதர் - ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வந்த அமெரிக்க தூதர்

ஹைதராபாத்: ஈநாடு குழுமத் தலைவர் ராமோஜி ராவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு ஹைதரபாத்திலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைவர் ஜோயல் ரீஃப்மேன் வருகை தந்தார்.

Joel
Joel
author img

By

Published : Jan 18, 2020, 9:23 AM IST

Updated : Jan 18, 2020, 5:39 PM IST

தெலுங்கு ஊடக உலகின் முன்னோடியான ஈநாடு பத்திரிகை, ஈடிவி தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை நிறுவியவர் ராமோஜி ராவ். இவர், ஊடகத்துறையில் மட்டுமல்லாது திரை உலகிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இவரது பெயரில் இயங்கிவரும் ராமோஜி ஃபிலிம் சிட்டி என்னும் திரைப்பட படப்பிடிப்புத் தளம் உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு ஸ்டூடியோ என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

ஊடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ராமோஜி ராவைச் சந்திக்க ஜோயல் ரீஃப்மேன், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள ஈடிவி பாரத் அலுவலகத்திற்குச் சென்றார். ராமோஜி ராவின் வெற்றி ரகசியத்தை தெரிந்து கொள்ள ஜோயல் ஆர்வத்துடன் இருந்தார். ஈடிவி பாரத் குழுவின் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஜோயல், ராவை சந்தித்ததில் வியப்படைந்தார்.

ஈடிவி பாரத் அலுவலகத்திற்கு வருகை தந்த அமெரிக்க துணைத் தூதர்

மக்கள் தொடர்பு அலுவலர் ட்ரூ கிப்ளின், ஊடக ஆலோசகர் முகமது பசித் ஆகியோர் ஜோயலுடன் ஈடிவி பாரத் அலுவலகத்திற்குச் சென்றனர். நிர்வாக இயக்குநர் பிபிநீடு சவுத்ரி, ஆசிரியர் குழு உறுப்பினர்கள், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஜோயலை வரவேற்றனர். செயலி மூலம் 13 மொழிகளில் செய்தி எவ்வாறு தரப்படுகிறது என்பதை தொழில்நுட்பக் குழு விளக்கியது. செய்தி நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய ராமோஜி ராவை ஜோயல் பாராட்டினார்.

இதையும் படிங்க; இந்திய ராணுவத்துக்கு புதிய துணைத்தளபதி நியமனம்

Intro:Body:Conclusion:
Last Updated : Jan 18, 2020, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.