லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பதவியிலிருந்த லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். நரவனே, ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ராணுவ துணைத் தளபதியான சைனி தேசிய பாதுகாப்புக் காவலரின் பயிற்சி மையத்தில் ஆயுத பயிற்றுவிப்பாளராகவும், டெல்லியின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூத்த இயக்குநராகவும்; இந்திய ராணுவ அகாடமியின் கமாண்டன்ட் டெஹ்ரா டன்னாகவும் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
இந்திய ராணுவத்தின் (தெற்கு) கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி படைகளின் புதிய துணைத்தளபதியாக இருப்பார். இவர் ஜன. 26ஆம் தேதி குடியரசு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகப் பொறுப்பேற்கிறார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான சைனி 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜாட் ரெஜிமென்ட்டில் நியமிக்கப்பட்டார். அவர் இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். சைனியின் துணிச்சல்மிகு நடவடிக்கையைப் பாராட்டும் பொருட்டு அவருக்கு பல்வேறு வீரதீர விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை!