இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 81 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இதனிடையே, தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்கள் முகமூடிகளை பயன்படுத்திவருகின்றனர். இதனால், அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது. கேரள லத்தீன் கத்தோலிக்க சங்கத்தின் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு பல காலமாக செய்துவருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் உழைத்து தங்களின் தையல் இயந்திரங்களை பயன்படுத்தி 500 முகமூடிகளை தன்னார்வலர்கள் தயார் செய்துவருகின்றனர். பின்னர், அதனை மாநில சுகாதாரத் துறைக்கு விலையின்றி வழங்குகிறார்கள். இதுகுறித்து கேரள லத்தீன் கத்தோலிக்க சங்கத்தின் கள்ளூர் செயலாளர் பிஜு வல்லிபாரம்பில்வ கூறுகையில், "தேவைக்கேற்ப முகமூடிகளை தயார் செய்வது பிரச்னையாக உள்ளது.
அதிக பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே, முகமூடிகளை தயார் செய்து விலையின்றி வழங்கிவருகிறோம். 20,000 முகமூடிகளை தயார் செய்வதற்கான மூல பொருள்கள் எங்களிடம் உள்ளது. உற்பத்தியை அதிகரிக்க எங்களிடம் திறன் உள்ளது" என்றார். முகமூடிகளை தயார் செய்வதற்கான மூல பொருள்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி உச்ச நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடுகள்