ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர். ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் மே மாதம் 7ஆம் தேதி பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியது.
உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, விபத்து குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர அரசு ஒரு உயர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் காலக்கெடு ஜூன் 9ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இந்நிலையில், அறிக்கை தாக்கல் செய்தவற்கான காலக்கெடுவை ஜூன் 22ஆம் தேதியாக நீட்டித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் வன அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சிறப்பு தலைமைச் செயலர் நீரப் குமார் பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் நான்கு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்ஜி பாலிமர்ஸ் விஷ வாயு பாதிப்பில் மேலும் ஒருவர் பலி