பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனைத் திரும்பச் செலுத்தாமல் 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு லண்டனுக்குத் தப்பியோடினார்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவரை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தலாம் என 2018 டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, 2019 பிப்ரவரி மாதம் மல்லையாவை நாடு கடத்துவதற்குப் இங்கிலாந்து உள் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் இர்வின், எலிசபெத் லியாங் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பு வழங்கினர்.
இதையும் படிங்க : கூட்டத்தை தவிர்க்க 10 ஆயிரம் மலர்களை பூக்கச்செய்த ஜப்பான்!