ETV Bharat / bharat

ஆயிரம் ரூபாய்க்காக நேபாளியாக நடித்த இளைஞர் - வைரலான வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்! - நோபாளி மொட்டை

வாரணாசி: நேபாள நபர் ஒருவருக்கு மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கூற கட்டாயப்படுத்துவது போன்ற வீடியோவில் உள்ள நபர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் இந்தியர்தான் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP Oli  Jai Shree Ram  Varanasi viral video  Vishwa Hindu Sena  Lord Ram  Varanasi SSP Amit Pathak  நேபாளப் பிரச்னை
ரூ. 1000 பெற்றுக்கொண்டு நேபாளியைப் போல் நடிப்பு... !
author img

By

Published : Jul 19, 2020, 11:12 AM IST

Updated : Jul 19, 2020, 1:11 PM IST

நேபாள நாட்டின் புதிய வரைபடத்தின் சர்ச்சையைத் தொடர்ந்து இந்திய-நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாள நாட்டில் ஒளிபரப்பாகும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேபாளத்துக்கு எதிரான கருத்துகள் கூறப்படுவதால் கூறி அந்நாட்டுப் பிரதமர் ஷர்மா ஒலி அந்நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்தார். சமீபத்தில், ”ராமர் பிறந்த அயோத்தி இந்தியாவில் இல்லை; அது நேபாளத்தில் இருக்கிறது என்றும், ராமர் ஒரு நேபாளி என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சில நபர்கள், இளைஞர் ஒருவருக்கு மொட்டையடித்து, தலையில் ஜெய் ஸ்ர ராம் என எழுதி, அவரை நேபாளப் பிரதமருக்கு எதிராக முழக்கம் எழுப்பக் கட்டாயப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ வெளியானது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச காவலர்கள் ஆறு பேரைக் கைதுசெய்து விசாரிக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தை நிகழ்த்தியது அருண் பதாக் என்பவர் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"வீடியோவில் காட்டப்பட்ட மொட்டையடிக்கப்பட்ட இளைஞரை நாங்கள் இன்று சந்தித்தோம். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்தான்; அவர் நேபாளி அல்ல. அவருடைய பெற்றோர் இருவரும் அரசு ஊழியர்கள். வீடியோவில் காண்பிக்கப்பட்ட செயலைச் செய்ய அவர் ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்" என வாரணாசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அமித் பதாக் அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கவிஞர் வரவர ராவ்: நரம்பியல் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு மாற்றம்!

Last Updated : Jul 19, 2020, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.