ETV Bharat / bharat

மன் கி பாத்: பண்டிகையின்போது மக்கள் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்!

டெல்லி: 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் போது மக்கள் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

verve-of-onam-can-be-felt-everywhere-pm-modi

author img

By

Published : Aug 30, 2020, 12:40 PM IST

Updated : Aug 30, 2020, 1:15 PM IST

பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் 2014ஆம் ஆண்டு முதல் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதத்திலும் உள்ள கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இந்த மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால், இன்று (ஆகஸ்ட் 30) மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''ஓணம் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். ஓணம் பண்டிகையின்போது புத்தாடைகள் வாங்குவார்கள், வீடுகளை அலங்கரிப்பார்கள், வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். இது பண்டிகைக்கான நேரம் என்றாலும் கரோனா சூழல் காரணமாக மக்கள் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பேரிடர் மீட்புப் பணிகளில் நாய்கள் மிகமுக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவில் தேசியப் பேரிடர் மீட்புப் படை மூலம் நாய்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற நாய்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்களைக் கண்டறிவதில் வல்லுநர்களாக செயல்படுகிறது.

இந்திய இன நாய்கள் மிகவும் திறமையானவை என எனக்குத் தெரியவந்தது. அவ்வகையான நாய்களின் பராமரிப்பு செலவும் குறைவு என்பதோடு, இந்திய சூழலுக்கு நல்ல பழக்கமாக உள்ளது. தற்போது இந்திய இன நாய்களை பாதுகாப்புப் படைப் பிரிவில் பயிற்சியளித்து சேர்த்து வருகின்றனர். இதனால் நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை ரக நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்.

மொபைல்கள், கணினிகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில், கேம்களை அதிகமானோர் விளையாடுகின்றனர். அதிலும் குழந்தைகளும், நடுவயதினரும் அதீத ஈடுபாடு காட்டுகின்றனர். இவ்வகையான கேம்களின் கருப்பொருள்கள் பெரும்பாலும் புறம்பானவையாக உள்ளது. அதில் மாற்றம் காண வேண்டும்.

எப்போதும் புதுமை, தீர்வு, அர்ப்பணிப்பு, உணர்திறன் ஆகியவற்றில் இந்தியர்களின் திறன் அனைவருக்கும் தெரியும். இந்த மாதத் தொடக்கத்தில் இளைஞர்கள் முன் புதிய செயலிக்கான சவால் விடுக்கப்பட்டது.

சுயசார்பு இந்தியா சார்பாக விடுக்கப்பட்ட சவாலுக்கு கிடைத்த விடையாக குழந்தைகளுக்கான செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் செயலியின் பெயர் KutukiKids Learning app ஆகும். இந்தச் செயலி குழந்தைகளுடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தினால் குழந்தைகள் கணிதம், அறிவியல் ஆகியவற்றை கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தச் சவாலில் மற்றொரு செயலியும் சிறப்பாக உள்ளது. அந்தச் செயலியின் பெயர் Step Set Go எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஃபிட்னெஸ் செயலியின் மூலம் நாம் எந்த அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எவ்வளவு தூரம் நடந்துள்ளோம். எத்தனை கலோரிகளை எரித்துள்ளோம் என்பதை எளிதாக அறிய முடிகிறது. இதனை அறிவதன் மூலம் நமது உடலினைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவுகிறது.

இது மட்டுமல்லாமல் பல வணிக செயலிகள், கேமிங் செயலிகள், புத்தகங்கள் மற்றும் செலவுகளுக்கான செயலிகள் எனப் பல செயலிகள் சிறந்ததாக உள்ளது. அதனைப் பற்றி இணையத்தில் தேடினால் நீங்கள் இன்னும் அதிகமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

பொம்மைகள் செய்வதற்கு இந்தியாவில் மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. நல்ல பொம்மைகள் செய்வதற்கு பல திறமையான கைவினைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதிலும் இந்தியாவின் சில பகுதிகள் பொம்மைகள் செய்யும் மையமாகவே திகழ்கிறது.

கர்நாடகாவின் ராம்நகரம், ஆந்திராவின் கிருஷ்ணா, கோதண்டபள்ளி, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அஸ்ஸாமில் துப்ரி எனப் பல ஊர்கள் பொம்மைகள் செய்யும் மையங்களாகவே உள்ளன. பொம்மைகள் உருவாக்குவது புதியக் கல்விக் கொள்கையில் ஒரு பாடமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதியக் கல்விக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நமது உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு எப்போதும் முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் கரோனாவை வீழ்த்த முடியும். இதனை மக்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: ஜனநாயகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகாரம் - சோனியா காந்தி தாக்கு

Last Updated : Aug 30, 2020, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.