ETV Bharat / bharat

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு! - காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு

டெல்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலில் தான் இட்ட பதிவில் காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை நீக்கிவிட்டு, தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட படத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதிவிட்டார்.

venkaiah naidu tweet about thiruvallur  venkaiah naidu tweet kaavi thiruvalluvar  வெங்காய நாயுடு ட்வீட்  வெங்காய நாயுடு திருவள்ளுவர்  வெங்காய நாயடு காவி திருவள்ளுவர் ட்வீட்  காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்காய நாயுடு
வெங்கையா நாயுடு திருவள்ளுவர்
author img

By

Published : Jan 16, 2020, 11:28 AM IST

Updated : Jan 16, 2020, 1:11 PM IST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் குறித்து, "சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அதில், காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை அவர் முதலில் பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அந்தப்பதிவில் தனது கருத்தை பதிவு செய்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், "தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துங்கள்.

venkaiah naidu tweet about thiruvallur  venkaiah naidu tweet kaavi thiruvalluvar  வெங்காய நாயுடு ட்வீட்  வெங்காய நாயுடு திருவள்ளுவர்  வெங்காய நாயடு காவி திருவள்ளுவர் ட்வீட்  காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்காய நாயுடு
வெங்கையா நாயுடு இரண்டாவது இட்டப் பதிவு

அவரை சாதியாலும் மதத்தாலும் சித்தரிக்கும் காவி உடை அணிந்த படத்தை தயவு செய்து நீக்குங்கள். திருவள்ளுவர் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்" என்று குறிப்பிட்டிருந்தார். இதன்பின்பு சிறிது நேரத்திலேயே வெங்கையா நாயுடு காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை நீக்கிவிட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டார்.

இதையும் படிங்க: நோட்டு புத்தகங்களை வைத்து திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை

Intro:Body:

VP tweet on Thiruvalluvar sparks controversy

Conclusion:
Last Updated : Jan 16, 2020, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.