மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில், மாநிலத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுச் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என மனுவில் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, திமுகவை தொடர்ந்து மதிமுக சார்பில் வைகோவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அனைத்து வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.