முதலாவதாக குற்றவாளிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார்கள். தூக்கு தண்டனைக்கு தயார்படுத்தப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடக்கும்.
தூக்கு கயிறு சோதிக்கப்படும். தூக்கு கயிறு பிரத்யேகமாக பிகாரின் பக்ஸர் சிறையிலிருந்து வருகிறது. இதுவும் ஒரு நடைமுறை. முன்னதாக மாதிரி ஒன்றை உருவாக்கி அதனை தூக்கிலிட்டு சோதிப்பார்கள். அந்த மாதிரி குப்பை மற்றும் கற்களால் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டை ஆகும்.
மாவட்ட மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றவாளிகளின் கடைசி விருப்பம் கேட்கப்பட்டு அது எழுதப்படும். பின்னர் குற்றவாளி கடைசியாக பார்க்க விரும்பும் நபரை பார்க்க அனுமதிக்கப்படுவார். மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னர் தூக்கு கைதி சிறிது நேரம் நடக்க அனுமதிக்கப்படுவார்.
மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கைதி சிறைக்குள் இருந்து வெளியே அழைத்து வரப்படுவார். அதன் பின்னர் அவரின் கைகள் பின்னால் கட்டப்படும். இறுதியாக காவலர்கள் அவரை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்வார்கள். சிறை விதிகளின்படி கைதி தூக்கு மேடையை பார்க்க அனுமதியில்லை.
முன்னதாக தூக்கு கைதியின் முகம் கறுப்பு துணியால் மறைக்கப்படும். தூக்கு கயிறு கழுத்தில் மாட்டப்படும். நிறைவாக தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர், தூக்குக் கயிரை தாங்கும் நெம்புக்கோலை இழுப்பார். இது மிகவும் கடினமானது.
தண்டனை நிறைவேற்றிய பின்னர் அரை மணி நேரம் அப்படியே இருக்கும். இறுதியாக மரணத்தை அங்கிருக்கும் மருத்துவர் உறுதி செய்வார். இதையடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதியின் உடலை தனித்தனியே தகனத்துக்காக வெளியே எடுக்க வேண்டும் என்று சட்டவிதி கூறுகிறது. இறுதியாக அவர்களின் உடல் தகனம் செய்யப்படும்.
இதையும் படிங்க: அமைதி கொள் நிர்பயா!