புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சட்டப்பணிகள் ஆணையம் என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் அந்த இயக்கம் சார்பில் இன்று மழை நீரை சேகரிப்போம் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு தொடங்கினார்.
இந்த பரப்புரையின் முக்கிய நோக்கம் வீட்டு மாடியில் விழும் மழைநீரை எப்படி சேகரிப்பது என்பதாகும். இதுகுறித்து ஐந்தாயிரம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், இருசக்கர வாகனத்தில் கூரை போல் அமைத்து அதில் விழும் மழைநீரை சேமிப்பது போல் அலங்காரம் செய்துள்ளனர்.
மேலும் இந்த பரப்புரையில் அவ்வை இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் பின்தொடர்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது.