கேரள மாநிலம் திருர் பகுதியிலிருந்து இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று பொள்ளாச்சியை நோக்கி இன்று (பிப்.02) சென்றுகொண்டிருந்தது.
அப்போது, காலை 4:45 மணிக்கு வலஞ்சேரி வட்டப்பரா என்னும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், லாரி உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துகர், கேரள மாநிலம் மலம்புழாவைச் சேர்ந்த ஐய்யப்பன் எனத் தெரியவந்தது.
இதையும் படிங்க: குழந்தையுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு... விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!