இந்தியா முழுவதும் கரோனா பெருந்தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாக மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஓயாமல் பணி செய்துவருகின்றனர்.
இந்நிலையில் அவர்களிடையே கரோனா பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஹைதராபாத் ஓஸ்மானியா மருத்துவமனையில் 12 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை தெலங்கானாவில் 2 ஆயிரத்து 792 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 88 பேர் உயிரிழந்துள்ளனர். 1491 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் 13 பேருக்குக் கரோனா தொற்று!