அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ட்ரம்புக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் உலா வந்தது. இந்தச் குற்றச்சாட்டுகளுக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். அதில் "நீதிபதி ஒருவர் சில பொருந்தாத குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் தன்னை தற்காத்து கொள்ளட்டும்” என்றார் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 36 மணி நேர இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிவிட்டார். அவர் தனது இந்தியப் பயணத்தின்போது, பிரதமர், குடியரசுத் தலைவர், தொழிலதிபர், அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்பட பலரை சந்தித்தார். ட்ரம்பின் இந்தப் பயணத்தின்போது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'மூளையில்லாத குரங்குகள்' - பாக். பேராசிரியரை சாடிய ஹிருத்திக்ரோஷன்