பல நூற்றாண்டுகளாகவே திருநங்கைகள் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் பின்தங்கியவர்களாகவும், குறிப்பாக, சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கான புதிய சட்டத் திருத்தம் ஒன்றினை சமூகநீதித் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக இருந்த சட்டத்திருத்தத்தில் திருநங்கைகள் யாசகம் கேட்பது குற்றமாக இருந்தது. ஆனால் தற்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தில் அந்த வாக்கியம் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், செய்து கொள்ளாவிட்டாலும் ஒருவர் தன்னை திருநங்கையாக அடையாளம் காட்டிக்கொள்வதற்கு அவருக்கு உரிமை உண்டு எனவும், ஆனால் அதற்கு மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும் என சட்டத்திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.