ETV Bharat / bharat

நீட் தற்கொலை; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சரமாரி கேள்வி! - Delhi

நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

நீட் தேர்வு டி.ஆர். பாலு நாடாளுமன்றம் டெல்லி திமுக எம்.பி நீட் மாணவர்கள் தற்கொலை NEET syllabus நீட் பாடத்திட்டம் TR Balu NEET Exam Delhi DMK MP

author img

By

Published : Sep 14, 2020, 12:41 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (செப்.14) முதல் தொடங்கி நடக்கிறது. இந்நிலையில் திமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர்கள்.

உங்களுக்கு தெரியுமா? இவர்கள் அனைவரும் மாநில அரசு நடத்திய 12ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள். ஆனாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பொதுவாக நீட் தேர்வு வினாக்கள் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்படுகின்றன. ஆகவே மாநில அரசின் பாடத்திட்டத்தில் கல்வி பயின்றவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

இது மட்டுமின்றி 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் வெற்றிபெற்று வரும், அடுத்த மாதங்களில் நடைபெறுகிறது. அவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத் திட்டங்கள் குறித்து எந்த அடிப்படையும் தெரியாது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த உதவியற்றவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

நீட் தற்கொலை; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சரமாரி கேள்வி!

உங்களுக்கு தெரியுமா? மருத்துவராகும் கனவிலிருந்த இந்தியாவின் இளம் மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு நடத்துகிறது. இதில் மாணவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.

அரியலூரில் ஒரு மாணவி... அவள் பெயர் அனிதா... மருத்துவராகும் கனவில் இருந்த பட்டியலின மாணவி... தற்கொலை செய்து கொண்டாள். இது மட்டுமா 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அவர்கள், திருச்சி சுபஸ்ரீ, தேனி ரிதுஸ்ரீ, விழுப்புரம் பிரதீபா, பெரம்பலூர் கீர்த்தனா, தஞ்சை வைஷியஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரி ஆதித்யா, நாமக்கல் மோதிலால் ஆவார்கள்.

இவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள். இவர்கள் படித்தது மாநில அரசின் பாடத்திட்டத்தில், ஆனால் கேள்வி கேட்பது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில். இப்போதாவது புரிகிறதா? இவர்களால் எப்படி வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: நீட் வேண்டாம்: நாடாளுமன்றத்தில் பதாகைகள் ஏந்தி திமுக எம்.பி.க்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.