ஐக்கிய நாடுகள் சபைின் 14ஆவது காலநிலை மாற்றத்திற்கான கூட்டமைப்பு மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில், "மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளுக்கு உலகம் குட்பை சொல்ல வேண்டும். மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளுக்கு என் தலைமையிலான அரசு தடைவிதிக்கவுள்ளது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு உலகம் குட்பை சொல்லக்கூடிய காலம் வந்துவிட்டது. இந்த மாநாட்டின் தலைமையை இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு பெற்றுள்ளதால், இதற்கு பங்களிக்க வேண்டும் என எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
முன்னதாக, இந்த மாதம் நடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளுக்கு எதிராக அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.