ETV Bharat / bharat

சிறைக்குள் போன் சப்ளை செய்கிறதா காவல்துறை? - சிறைக்காவலர் பிரவீன்

டெல்லி : திகார் சிறைக்குள் கைதிகளுக்கு சிறைக் காவலர் ஒருவர் கைப்பேசிகளை விற்பனை செய்து வருவதாக சிறைவாசி ஒருவர் வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tihar prisoner accuses jail authority of providing mobile phones in jail
சிறைக்குள் போன் சப்ளை செய்கிறதா காவல்துறை?
author img

By

Published : May 20, 2020, 7:57 PM IST

திகார் சிறை எண் ஒன்றில் சிறைவாசியாக உள்ள சஷாங்க் என்பவரே சிறை நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள காணொலியை கைப்பேசியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், “பிரவீன் என்ற சிறைக்காவலர், சிறை விதிகளை மீறி சிறையில் உள்ள கைதிகளுக்கு கைப்பேசிகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து வருகிறார்.

இந்த சிறையில் கைதிகளின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அடக்குமுறையை ஏவுவது, தொடர்ச்சியாக கைதிகள் மீது தாக்குதல் நடத்துவது என சிறைவாசிகளை மென்மேலும் மனதளவில் பாதிக்கச் செய்யும் கடும்போக்கு அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

சிறையில் நடக்கும் அநீதிகளை குறித்து நான் வெளிப்படுத்துவதால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. சிறை நிர்வாகமும் என்னை துன்புறுத்தலாம். ஆனால் இங்கே நடக்கும் தவறான நடவடிக்கைகளை வெளியுலகிற்கு கொண்டுச் சேர்ப்பதே மிகவும் முக்கியம்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைக்குள் போன் சப்ளை செய்கிறதா காவல்துறை?

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிகார் சிறைத்துறை அலுவலர்கள், “இந்த காணொலியை வெளியிட்டுள்ள சிறைவாசியின் மீது கொள்ளை உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில காலத்திற்கு முன்பு, அவரது சிறை அறையில் இருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களுக்காக அவர் பல முறை சிறையில் தண்டிக்கப்பட்டுள்ளார். அதனை மனதில் வைத்து இத்தகைய குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கலாம். எனினும், அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை சிறைத்துறை நிர்வாகம் விசாரணை செய்யும். இதில் காவலர்கள் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க : 'மேக் இன் இந்தியா' திட்டம் - 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்கள் வாங்கும் பனி நிறுத்திவைப்பு

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.