கரோனா வைரஸ் நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகதமாபாத்தின் வதோதரா பகுதியில் ராணுவ மையம் உள்ளது. இங்கு பயிற்சி மேற்கொண்டு வந்த மூன்று கைவினைஞர்கள் வீரர்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
இதைத் தொடர்ந்து, வீரர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் வீரர்களின் பரிசோதனை முடிவுகள் ஆய்வு செய்த மருத்துவர்கள், கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து, பயிற்சி மையத்தில் வீரர்களுடன் தொடர்பிலிருந்த நபர்கள் கண்டறிந்து, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அத்துமீறும் பாகிஸ்தான்: பதிலடிக்கு தயாராகும் இந்தியா