சுதந்திர இந்தியாவில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேசத்தின் மீது அழியாத தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் உயர் கல்வி கற்றவர், தேர்ந்த அரசியல்வாதி, நீதித்துறை நிபுணர், சிறந்த பொருளாதார நிபுணர்.
கோடிக்கணக்கான நலிந்த மற்றும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு அதிகாரமளிப்பதற்காக போராடினார். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து அவர் எப்போதும் நினைத்தார்.
அண்ணல் காந்தியடிகள் நம்பிக்கை
அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட உயர்ந்த அரசியலமைப்பு ஏழு தசாப்தங்களுக்கும் (70 ஆண்டுகள்) மேலாக நம்மை வழிநடத்துகிறது. தீண்டாமைக்கு எதிரான ஒரு சிறந்த போராளியான அவர் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள அனைவருக்கும் பிரகாசமான வெளிச்சமாக இருந்து வருகிறார்.
மண்ணை விட்டு அவர் உயிரும் உடலும் மறைந்தாலும், இப்போதும் ஒரு கையில் ஒரு புத்தகமும் முன்னோக்கி சுட்டிக்காட்டும் ஆள்காட்டி விரலும் கொண்ட ஒரு உயர்ந்த சிலையாக நிற்கிறார்.
இந்திய அரசியலமைப்பின் எழுத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சபை, பல்வேறு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு 22 குழுக்களையும் 7 துணைக்குழுக்களையும் அமைத்திருந்த காலகட்டம் அது.
இவற்றில் மிக முக்கியமானது ஆகஸ்ட் 29, 1947 இல் அமைக்கப்பட்ட வரைவுக் குழு. வெவ்வேறு புவியியல் நிலைமைகள், இனங்கள் மற்றும் மதங்களுடன் மாறுபடும் ஒரு நாட்டிற்கு சிறந்த திசையை அமைப்பது குறித்து அம்பேத்கருக்கு தெளிவு இருப்பதாக காந்தியே நம்பினார்.
அயராத உழைப்பு
அரசியலமைப்பு சபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அவரது பெயரை முன்மொழிந்தனர். அவர் ஏற்கனவே சட்ட அமைச்சராக இருந்தார்.
அரசியலமைப்பு சபை 11 முறை கூடியது. ஒவ்வொரு வரைவையும் தயாரிப்பதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புகளைப் படித்தார்.
2 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் நீண்ட மற்றும் அறிவார்ந்த தேடலுக்கு பின்னர் வரைவுக் குழு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு பிரதிகள் தயாரித்தது. இதற்குப் பின்னால் அம்பேத்கரின் அயராத உழைப்பு இருந்தது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்த கசப்பான அனுபவத்தில் இருந்த பி.ஆர். அம்பேத்கர் நாட்டின் மற்ற மாநிலங்களை பிரிக்க விரும்பவில்லை.
அனைவரும் சமம்
நாட்டிற்கு இறையாண்மையைக் கொண்டுவருவதற்கான அவரது முயற்சி மறக்க முடியாதது. எந்தவொரு சிறப்பு சலுகைகளும் இல்லாமல் அனைவருக்கும் ஒற்றை குடியுரிமை மற்றும் அனைவருக்கும் சமமான நீதியுடன் ஒரு நீதி அமைப்பு அமைக்கப்பட்டது. அரசியலமைப்பின் பார்வையில் அனைவரும் சமம் என்று அவர் வலியுறுத்தினார்.
தீண்டாமைக்கு தடை
பழங்குடியினர், பட்டியலின மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு வழங்க அவர் முன்மொழிந்தார்.
அனைவருக்கும் அடிப்படை உரிமை, நீதிமன்றங்கள் வாயிலாக சாமானியனுக்கும் அரசியலமைப்பில் அதிகாரம் என 32ஆவது சட்டப்பிரிவை இணைத்தார்.
அண்ணல் காந்தியடிகளின் பரிந்துரைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். தீண்டாமையை கடுமையாக எதிர்த்தார். அதனை தடுக்க சட்டங்களை கொண்டு வந்தார். இந்த காலக்கட்டங்களில் இரவும், பகலும் நாட்டுக்காக உழைத்த அம்பேத்கரின் உடல் நிலை மோசமடைந்தது.
மறைவு
நிலையான வாசிப்பு அவரது கண்பார்வையை குறைத்து விட்டது. தொடர்ந்து உட்கார்ந்து இருந்ததால் முதுகுவலி ஏற்பட்டது. ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கம் அவருக்கு நீரிழிவு நோயை கொண்டு வந்தது.
இந்த வலிகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடினார்.
கடைசியாக 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி சுவாசித்தார். அப்போது அவருக்கு கண் பார்வை இல்லை.
ஆனால் அவர் ஏற்றிய தீபம், ஆண்டாண்டு காலமாக இருளை மட்டுமே நம்பி, இருளுக்குள்ளே சிக்குண்டு கிடந்த வெகுஜன மக்களுக்கு பேரொளியை கொடுத்தது. அந்த வெளிச்சத்தில் நாடு இன்றும் நடைபோடுகிறது.!
இதையும் படிங்க: ஜமீன்தாரி முறைக்கு எதிராக வாக்களித்த ஜமீன் காளியண்ண கவுண்டர்.!