ETV Bharat / bharat

நவம்பரில் உச்சமடையுமா கரோனா பாதிப்பு? ஐசிஎம்ஆர் விளக்கம்

டெல்லி : இந்தியாவில் நவம்பர் மாதம் கரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று பரவிய தகவலுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்
author img

By

Published : Jun 15, 2020, 2:16 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கரோனா தொற்றின் தாக்கம் உச்சமடையும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே ஊரடங்கு, வேலையிழப்பு, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பெரும் அச்சத்தைத் தருவதாக அமைந்தது.

இந்நிலையில், நேற்று பரவிய செய்திகள் தவறானவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது விளக்கமளித்துள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐசிஎம்ஆரின் ஆய்வு என்று பரவும் இந்த செய்திகள் தவறானவை. இந்த ஆய்வு முடிவு சக வல்லுநர்களால் சரிபார்க்கப்படாத ஒன்று.

மேலும், இந்த ஆய்வை ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை. இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகள் ஐசிஎம்ஆரின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல" எனப் பதிவிட்டுள்ளது.

  • The news reports attributing this study to ICMR are misleading. This refers to a non peer reviewed modelling, not carried out by ICMR and does not reflect the official position of ICMR. pic.twitter.com/OJQq2uYdlM

    — ICMR (@ICMRDELHI) June 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியாவில் தற்போது வரை 3,32,424 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 9,524 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 83 நாள்களுக்குப் பின் மும்பையில் புறநகர் ரயில் சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.