கரோனா வைரசின் தாக்கம் தற்போது ருத்ரதாண்டவமாடுகிறது. இதனால் உலக வல்லரசு நாடுகளே கதிகலங்கிப்போயுள்ளன.
இந்தப் பெருந்தொற்றின் தாக்கம் இந்தியாவிலும் கணிசமாக அதிகரித்துவருகிறது. இதுவரை நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் தெலங்கானாவில் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலா ஒருவர் உயிரிழந்தும் குணமடைந்தும் உள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மிகத் தீவிரமாகவே எடுக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் தேவையில்லாமல் வெளியே சுற்றி துப்பாக்கிச் சூடு நடத்தும் நிர்பந்தத்திற்குத் தள்ள வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில், இன்று அவர், "ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் கரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா ஆக்கப்படும்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.