தெலங்கானா மாநிலத்தில் கடந்த 47 நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவந்த போக்குவரத்து ஊழியர்கள் நேற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
மாநில போக்குவரத்து துறையின் ஐயாயிரத்து 100 வழித்தடங்களை, தனியார் தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜன சமித்தி கட்சியைச் சேர்ந்த விஸ்வேஷ்வர் ராவ் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொழிலாளர் ஆணையம் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிப்பு!