தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நண்பர்களுடன் கடந்த மாதம் திருப்பதிக்கு சென்று வந்தார். கரோனா தொற்று அறிகுறிகள் இல்லாததால், பரிசோதனை மேற்கொள்ளமால் இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞருக்கு திடீரென்று நேற்று முன்தினம் (ஜூலை 22) உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரை பரிசோதித்ததில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
இதையடுத்து, சடலத்தை மயானத்திற்கு கொண்டுச் செல்ல அக்கம் பக்கத்தினரிடம் உறவினர்கள் உதவி கோரினர். ஆனால், கரோனா அச்சத்தால் யாரும் உதவ முன்வரவில்லை. பின்னர், வேறுவழியின்றி குடும்பத்தினர் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.