இது தொடர்பாகப் பேசிய தெலங்கானா உள் துறை அமைச்சர், "ஆண்டுதோறும் போனலு திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தெலங்கானாவை தனி மாநிலமாக அறிவித்த பின்பு, போனலு திருவிழா மாநில பண்டிகையாக அறிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு இப்பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மாநில அரசு 15 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி மறுத்துள்ளன.
இதன்காரணமாக திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவினர், அலுவலர்கள் அனைவரும் மாநில அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
போனலு திருவிழாவை பக்தர்கள் கோயிலுக்குச் சென்று கொண்டாட முடியாத காரணத்தினால் மாநில அரசு இந்தத் திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.