ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மதுராவில் நெற்றியில் 'திலகம்' வைத்து, நீண்ட பட்டையுடன், சாமியார் போன்ற நீண்ட தலைமுடியோடு காணப்பட்டார்.
தேஜ் பிரதாப், தீபாவளியைக் கொண்டாடுவதற்காக கடந்த சனிக்கிழமை மதுரா சென்றிருந்தார். அங்கு ராதாகுண்டில் உள்ள ஒரு விழாவில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு ஒரு பெரிய கூட்டத்தை கவனித்த அவர் அதில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திலிருந்து விலகிவிட்டார்.
பின்னர், அவர் பிருந்தாவனத்தில் யமுனா நதிக்கரையில் உள்ள கோவர்தன் பூஜை, சடங்குகளில் பங்கேற்றார். தேஜ் பிரதாப், தனது மதுரா பயணத்தின்போது யமுனை மாசுபாடு குறித்து கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், “யமுனாவின் நிலையைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். இது மிகவும் மாசுபட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும்” என்றார். தொடர்ந்து யமுனையின் நீரையும் பருகினார்.
அப்போது, டெல்லியின் ரசாயனத்தை யமுனாவிலிருந்து மக்கள் குடிக்கிறார்கள்...! இது நீர் அல்ல என்று தெரிவித்த அவர், இது குறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசு அவ்வாறு செய்ய தவறினால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மாமியார் வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய 'ஐஸ்வர்யா ராய்'