கரோனாவை எதிர்க்க உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு குழந்தைகள் பண்டிகை கால சேமிப்பு நிதியை வழங்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து, புத்தாண்டு தினமான விஷு கொண்டாட்டத்தில் கிடைக்கப்பெறும் ‘விஷு கை நீட்டம்' என்னும் பணப் பரிசை அரசுக்கு கொடுக்க பத்தாம் வகுப்பு பயிலும் அபிராஜ் முடிவுசெய்தார்.
இதற்காக, அதிகாலையில் எழுந்து கிருஷ்ணர் போல வேடமிட்டு, தன் நண்பர்களுடன் கிளம்பினார். முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பாதுகாப்பாகச் செல்ல அபிராஜும், அவரதுய நண்பர்களும் முடிவுசெய்திருந்தனர். கிருஷ்ணருக்கு மக்கள் அருளும் கை நீட்டம் (காணிக்கை) அனைத்தையும் கரோனாவின் இழப்புகளுக்கு பயன்படுத்த பேராவலுடன் ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டினார்கள்.
கரோனாவால், வீட்டிற்குள் முடங்கியிருந்த குடும்பங்களுக்கு கிருஷ்ணனின் வருகை இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, சமூக விலகல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு விதிகளுடன் கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவன் அபியை தேநீர், இனிப்பு வகைகளுடன் வரவேற்றனர்.
அபிராஜ் கிட்டத்தட்ட 50 வீடுகளுக்கு, தெய்வீகச்சிரிப்போடு சென்று, ஐந்தாயிரத்து 101 ரூபாயை கரோனா நிதியாகப் பெற்றார். இந்த நிதியை, பஞ்சாயத்து உறுப்பினர் ரஞ்சித்திடம் ஒப்படைத்து, முதலமைச்சர் நிதிக்கு அனுப்ப அபிராஜ் கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: 'வெளவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்' - ஐ.சி.எம்.ஆர்