அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): மாநில அரசுடன் இணைந்து பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று பழங்கள், காய்கறிகளை விநியோகம்செய்ய ஸ்விகி நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்விகி நிறுவனம், “ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அரசு மக்களுக்கு இந்த இக்கட்டான கட்டத்தில் உதவிட வாய்ப்பளித்தமைக்கு பெருமிதம்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
மேலும், விரைவில் உங்களின் வீடுகளுக்கே பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் துறையின் வழிகாட்டுதலுடன் கொண்டுவந்து தருகிறோம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.