ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து சில ஊடகங்களிலும், ட்விட்டர் சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி காட்டுத் தீயைப் போன்று பரவத்தொடங்கியது.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டார். பின் சில மணி நேரத்தில் அந்த பதிவை நீக்கினார்.
இந்நிலையில், சுஷ்மா சுவராஜ் தான் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தான் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆந்திர ஆளுநராக தான் நியமிக்கப்பட்டது ட்விட்டரில் இருப்பதே போதும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.