ETV Bharat / bharat

கர்நாடக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு! - கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

டெல்லி: கர்நாடக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

SC
author img

By

Published : Oct 25, 2019, 11:27 PM IST

கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சரானார். பின்னர், இந்தக் கூட்டணியிலிருந்து 17 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

இதனிடையே, இவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி தோற்றதன் மூலம், பாஜகவின் எடியூரப்பா அம்மாநில முதலமைச்சராக நான்காவது முறையாகப் பதவி ஏற்றார்.

பதவி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் இடைத்தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குமாறு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க: ஹரியானாவில் பாஜக ஆட்சி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.