ETV Bharat / bharat

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை - காவல் துறை விசாரணை - Puduchery state news

புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suicide-by-armed-guard-police-investigation

author img

By

Published : May 30, 2020, 7:01 PM IST

புதுச்சேரி இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலராக இருப்பவர் பாலாஜி. ஆறு மாதத்திற்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. கோரிமேடு பகுதியிலிருக்கும் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள IRBN அலுவலகத்தில் நேற்று பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு காவலர் பாலாஜி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலை நடைபயணம் செய்த காவலர்கள், சடலத்தைப் பார்த்து தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனையடுத்து உடலைக் கைப்பற்றிய தன்வந்திரி காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணம் நடந்து ஆறு மாதங்கள் தான் ஆகியுள்ளது என்பதால் குடும்பப் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமா உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதல்: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவரிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.