இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவில் கரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசியை கொண்டு வந்துள்ளோம். கோவாக்சின், கோவீஷில்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே 10 லட்சத்துக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு வெற்றிகரமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சிலர் தவறான செய்திகளை பரபுவர் அதனை நம்பவேண்டாம். அவ்வாறு பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த தடுப்பூசி மூலமாக நோய் பரவுவதை கணிசமாக தடுத்து மக்களை பாதுகாக்க முடியும்.
பொதுமக்கள் தங்களுடைய மேல்சிகிச்சைக்காக அடையாளம் காணப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று எவ்விதமான கட்டணமும் செலுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். உங்களிடம் உள்ள அடையாள அட்டையை காண்பித்தால் போதும், அரசே சிகிச்சைக்கான கட்டணத்தை நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்தி விடும்"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.