உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் விளங்குகிறது. காதலின் நினைவுச்சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் கட்டடக்கலையின் சிறந்த உதாரணமாகவும், மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. ஆக்ரா நதிக்கரையை அழுகுபடுத்தி சுற்றுலாப் பயணிகளை பிரமித்து பார்க்க வைக்கிறது. தாஜ்மஹால் உருவான கதை கதையல்ல காதலின் வரலாறு.
இந்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்கும் தாஜ்மஹாலில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட பெண்கள் மிகவும் சிரமப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய தொல்பொருளியல் ஆய்வுத்துறை அறிவுறுத்தலின்படி தாய்ப்பால் புகட்டுவதற்கான பிரத்யேக அறை கட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
கட்டடம் கட்டும் பணிகள் முடிந்து, ஜூலை மாதத்திலிருந்து இந்த அறையானது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்ப்பால் தனியறைக் கொண்ட இந்தியாவின் நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ்மஹால் பெற இருக்கிறது.